Dhanush in Thangamagan Movie Tamil Review

தங்க மகன் விமர்சனம் :

நடுத்தர குடும்பத்தில் ராதிகா , கே.எஸ். ரவிகுமார் மகனாக தனுஷ் , நண்பர்களுடன் அரட்டை , எமி ஜாக்சன் உடன் காதல் மற்றும் அழகானா வாழ்க்கை என்று போகும் போது , திடீரென்று தனுஷ்க்கு எமி ஜாக்சன் உடன் காதல் முறிகிறது , தனுஷ் இன் நண்பனை மணக்கிறார் எமி , கொஞ்ச நாள் கழித்து சமந்தாவை வீட்டில் பார்த்து தனுஷ்க்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவருக்கும் சந்தோசமாக வாழ்க்கை போய்கொண்டு இருக்கும் போது தனுஷ் அப்பா கே.எஸ். ரவிகுமார் தற்கொலை செய்து கொள்கிறார் , அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது . தன் அப்பாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டு படிக்கிறார், என்பதே மீதி கதை .

தனுஷ் :
எமிஜாக்சன் உடனான காதல் காட்சிகளிலும் , சமந்தா உடனான குடும்ப பாங்கான நடிப்பிலும் , குடும்பத்தில் சிறந்த மகனாகவும் நடிப்பில் அசத்தி உள்ளார் .

எமிஜாக்சன் :
தனுஷுக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் ரசிக்கும் படியும் கலகலப்பாக இருக்கிறது, ஆனால் இன்னும் கொஞ்சம் நடிப்பில் முதிர்ச்சி தேவை .

சமந்தா :
தனுஷ் மற்றும் இவருக்கும் இடையே குடும்பதனமான காட்சிகள் அழுத்தமாகவும் அருமையாகவும் உள்ளது .

சதீஷ் :
தனது வழக்கமான டைமிங் காமெடியில் அசத்தி உள்ளார் .
ராதிகா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

அனிருத் :
காதை கிழிக்கும் வகையில் பாட்டு போடாமல் இருந்தது ஆறுதல் , என்ன சொல்ல பாடல் நல்ல மெலடி.

மொத்தத்தில் :
கலகலப்பாகவும் , விறு விறுப்பாகவும் செல்லும் முதல் பகுதி , இரண்டாம் பகுதி சோர்வடைய வைக்கிறது , மெகா சீரியல் மாதிரி போகிறது .
(3.5/5)

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes