Eetti Tamil Movie Review

ஈட்டி விமர்சனம் :
தஞ்சாவூரில் வசிக்கும் அதர்வாவிற்கு ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சியம் மற்றும் சென்னையில் வசிக்கும் ஸ்ரீதிவ்யா வுடன் பார்க்காமல் காதல் ( மிஸ்டு காலால் ) , இவர்களுக்கு இடையே எதிர்பாராமல் வரும் ரவுடி கும்பல் . அதர்வாவிற்க்கு இருக்கும் வித்தியசமான நோய் ( உடம்பில் சிறு காயம் பட்டாலும் இரத்தம் நிற்காமல் இருப்பது ) இதை எல்லாம் சமாளித்து காதல் மற்றும் ஆசிய போட்டியில் தங்கம் வென்றாரா ? என்பதை பல திருப்பங்களுடன் பரபரப்பாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் ரவி அரசு .
                 அதர்வா - ஸ்ரீ திவ்யா உடனான காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது . சண்டை காட்சிகள் மற்றும் இடைவேளை முன்பு கதையில் வரும் திருப்பங்கள் சூப்பர் . ஜி.வீ.பிரகாஷ் இசையில் பாடல்கள் படத்திற்கான வேகத்தடையே , பின்னணி இசை ஓகே ரகம் .
                காமெடி என்ற பெயரில் அதர்வா கூட சுத்தும் நண்பர்கள் மொக்க போடுகிறார்கள் .மொத்தத்தில் ஒரே படத்தில் பல கதையை சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர் . இன்னும் கொஞ்சம் விறு விறுப்பாக சொல்லி இருந்தால் நன்றாக பாய்ந்து இருக்கும் இந்த ‪#‎ஈட்டி‬ . ( 2.5/5).

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes