Dhilluku Dhuddu Movie Review in Tamil

தில்லுக்கு துட்டு விமர்சனம் :
சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானத்தை , பணக்கார வீட்டு பெண்ணான ஷனாயா காதலிக்கிறார் , தன் மகள் காதலை பிடிக்காத அப்பா , சந்தானத்தை கூலிப் படைத் தலைவன் மொட்டை ராஜேந்திரன் உதவியுடன் தீர்த்துக் கட்ட நினைக்கிறார்.
இவர்களின் காதலுக்கும் - பேய் பங்காளவிற்கும் எப்படி முடிச்சு போடுகிறார்கள் , மற்றும் சந்தானம் - ஷனாயா காதல் ஒன்று சேர்ந்ததா , மொட்டை ராஜேந்திரன் திட்டம் என்ன ஆனது என்பதே கதை .
சந்தானம் இந்த படத்தில் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடிக்க முயற்சி எடுத்து இருக்கிறார் , ஆனால் அதை விட எப்போதும் போல தனது டைமிங் காமெடியால் அசத்துகிறார் . மற்றவர்கள் பேசும் வசனங்களுக்கு இவர் கவுண்டர் கொடுக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அரங்கம் அதிர்கிறது .
முதலில் மெதுவாக செல்லும் கதை இடைவேளைக்கு முன்பிலிருந்து வேகமெடுக்கிறது , அங்கிருந்து ஆரம்பிக்கும் திகில் கலந்த நகைச்சுவை படத்தோடு ஒன்றி நம்மை ரசிக்க வைக்கிறது .
சந்தானத்திற்கு பிறகு படத்திற்க்கு மிக பெரிய பலம் மொட்டை ராஜேந்திரன் தான், கூலி படை தலைவனான ராஜேந்திரன் தனது ஆட்களை வைத்து கொண்டு அந்த பேய் பங்களாவில் செய்யும் அட்டகாசம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது , அதிலும் இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஒரு இருப்பது நிமிடம் வரும் காட்சிகள் சிரிப்பலையால் அரங்கம் அதிர்கிறது .
சந்தானத்திற்கு அப்பாவாக வரும் ஆனந்தராஜ் , கருணாஸ் , மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் என பெரிய காமெடி பட்டாளமே படத்தில் உள்ளனர் , அதிலும் ஆனந்தராஜ் கொஞ்சம் காமெடி பண்ணா, வில்லன்கிறதேயே மறந்து விடுவீங்க போல எனும் சொல்லு போது அரங்கில் விசில் பறக்கிறது .
பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் , கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை மிரள வைக்கிறது , கலை இயக்குநர் மோகன் ஆர் இன் பேய் பங்களா செட் மற்றும் தீபக் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு முதுகெலும்பாக இருக்கிறது.
லொள்ளு சபா தொடரை இயக்கிய ராம் பாலா இந்த படத்தை இயக்கி இருக்கிறார் , தியேட்டருக்கு வருபவர்கள் கவலை மறந்து சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே வைத்து எடுத்து இருக்கிறார் , அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் .
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு லாஜிக் எதுவும் பார்க்காமல் போனால் , கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம் . ( 3/5)

0 comments:

Post a Comment

Popular Posts

Facebook

TWITTER

Contact Form

Name

Email *

Message *

 
Copyright ©
Themes Created By Sora Templates & Mybloggerthemes